|
| |
மகளிர் சிறப்புப் பக்கம் ஹிந்தி நெடுங்கதை
என் உயிரற்ற உடல் கிடக்கிறது. பேரன் பேத்திகள், மகள்கள் & மாப்பிள்ளைகள், மகன்கள், மருமகள்கள் ஆகியோரால் வீடு நிறைந்திருக்கிறது. இவர்களில் யாரேனும் ஒருவர் வாய் திறந்து பேசிவிடுவார் போல் தெரிகிறது & ""ஐயோ பாட்டி! உனக்கு ஒன்றும் தெரியாதே...''""பாட்டி! ஏன் இப்படிப் படுத்துக் கிடக்கிறாய்?'' என்றோ, ""ஏன் பாட்டி! உனக்கு நேரம் & காலமே தெரியாதா? இப்படிப் படுத்துக் கிடக்கிறாயே?'' என்றோ கேட்டு விடுவார்களோ?
|
| |
2006 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓர்ஹன் பமுக்
(இலக்கியத்திற்கான 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஓர்ஹன் பமுக், துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இவர், தனது தாய்நாட்டின் சமூக அவலங்களை சுட்டிக் காட்டி எழுதிய, ""டர்க்கியின் அவலங்கள்'' என்ற நாவல், இவருக்கு உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசினைப் பெற்றுத் தந்துள்ளது.நோபிள் பரிசு அறிவிக்கப் படும் முன், இவரால் எழுதப்பட்ட, சிந்தனை யோட்டத்துடன் கூடிய விமர்சனக் கண்டனங்களடங்கிய கட்டுரையை, அவரது தாய் மொழியான டர்க்கியில் எழுதி, அந்நாட்டில் பெரும் பரபரப்பையும், உலக சிந்தனையாளர்களின் கவனத்தையும் கவர்ந்தார். அதன் ஆங்கில வடிவ, தமிழாக்கமே இந்தக் கட்டுரை)
|
| |
தென்கச்சி கோ. சுவாமிநாதன் பதில்கள்
கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை & எது மனிதனுக்கு அவசியம்? பாதையில் நடைபோட தன்னம்பிக்கை! பயமில்லாமல் நடைபோட இறைநம்பிக்கை! இன்றைய மனிதர்களுக்கு இப்படி இரண்டு நம்பிக்கைகளும் தேவைப்படுகின்றன. ஆனாலும் ஓர் உண்மை என்ன தெரியுமா? ஏதாவது ஒரு நம்பிக்கை முழுமையாக இருக்குமானால், அவனுக்கு இன்னொரு நம்பிக்கை தேவைப்படாது!
|
| |
நமது கிராமத்து முறங்கள் எங்கே?
நமது கிராமத்து முறங்கள் எங்கே?தூற்ற, தூசு தட்ட, புடைக்கப் பயன்படுவது முறம். இவ்வளவு நாள் வரை நமது பெண்மணிகளின் தளராத பணி களால் சுத்தமாக்கப்பட்ட தானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட நல்ல உணவைப் பெற்று வந்தோம்.இவைகளைப் புடைக்கும்போது உண்டாகும் ஒலி, எவ்வளவு மதுரமானது. இப்படிப்பட்ட முறங்கள் இப்போது காணக்கிடைக்குமா? முறங்களில் திறமையுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்த மாதரசிகள் உள்ளனரா? வியக்கிறார் டாக்டர் கோஷ்.
|
| |
மூடநம்பிக்கை
ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?
|
| |
ஓரிய பாகவதம் தந்த ஜகந்நாத தாஸர்
ஒரிஸ்ஸாவின் இலக்கிய கலாசார மறுமலர்ச்சியில் சமகாலத்தில் வாழ்ந்த ஐவருக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் பஞ்ச சகாக்கள் அல்லது ஐந்து நண்பர்கள் என்றழைக்கப்படுவர். அவர்களிலும் மூவருடைய பங்கு மிகக் குறிப்பிடத்தக்கது. முதல்வர் அந்த மறுமலர்ச்சியைத் துவக்கிய சரள தாஸர். அவர் ஒரியா மகாபாரதத்தை எழுதியவர். அடுத்தவர் ஜகமோகன நாமாயணம் எழுதிய பலராம தாஸர். அடுத்தவர் ஒரியா பாகவதத்தை உலகுக்குத் தந்த ஜகந்நாத தாஸர்....
|
| |
ஹோமிஜி ஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா
ஹாமிஜிஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில் 30.10.1909 இல் பிறந்தார். இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன் உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெதிகத் துறையை நோக்கிச் சென்றது. படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும் பெற்றார். இவர் ஒரு பிரம்மசாரி
|
| |
தூக்குக் கயிற்றில்
சிவாவுக்கு அலுத்துவிட்டது. தன் பணியில் இருந்து தனக்கு ஓய்வு தரும்படி அரசுக்குப் பலமுறை விண்ணப்பித்துவிட்டான். ஆனால், அவன் எந்தச் சிறைச் சாலைக்காகப் பணி ஆற்றிக் கொண்டு இருந்தானோ, அந்தச் சிறை அவனை விடுவதாக இல்லை.
|
| |
டாக்டர் மேடிஸன்
டாக்டர் மேடிஸன் மனிதரல்ல. நடமாடும் இரும்புச் சட்டங்களின் தொகுப்பு அவர். இது சிறுவயது முதலே அவருடன் பழகிவந்த எனக்கு நன்றாகத் தெரியும். இது எங்கே போய் முடியுமோ என்றுதான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
|
| |
உங்களோடு ஒரு வார்த்தை: நமது சரித்திரம் அடங்கிய கோயில்கள்
ராஜராஜ சோழனைக் காட்டிலும் ராஜேந்திர சோழன் பல அரும்பணிகள் செய்திருந்தாலும், வரலாற்றில் என்னவோ ராஜேந்திர சோழன்தான் பெரும்புகழோடு நிலைத்துவிட்டான். இது எதனால்... என்று தொடங்கிய விவாதம் எங்கெல்லாமோ சென்றுவிட்டது.
|
|
>>More Headlines
|