| Kalachuvadu |
| |
சென்னைக் கடலோரம்
சென்னையைப் பொறுத்தவரை மாறுதலின் தொடக்கம் வெளிப்படையாகத் தென்படுவது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. மும்பையையும் கொல்கத்தாவையும்போல நான் ஜீவ நகரம் என்று அழைக்கிற நகரம் சென்னை. முன்கூட்டித் திட்டமிட்ட நகரமல்ல, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை உருவாக்கிய நகரம். ஜீவ நகரங்களுக்கு பலத்தைவிட பலவீனமே அதிகம்.
|
| |
விவாதம்: வேளாண்மையும் விஞ்ஞானமும்: சில விளக்கங்கள்
இயற்கை வேளாண்மை என்பது ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டதாகும். நமது நாட்டில் பெருகி வரும் ஜனத் தொகை ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண முடியாது. வல்லரசு நாடான அமெரிக்காவில்கூட 1.2% இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.
|
| |
வீடியோ கலை: சிறு குறிப்பு
கதை இல்லாத, ஆனால் சில சமயம் 'கதாபாத்திர'ங்களும் இசையும் கொண்ட அசையும் படத்தை அல்லது படங்களைத் திரையில் காட்டுகிற, சினிமாவிற்கும் புகைப்படத்திற்கும் இடையே நிற்கிற 'வீடியோ ஆர்ட்' மேற்கில் வேரூன்றிவிட்டது.
|
| |
சிறியன செய்தல்
இன்றைய மைக்ரோ எலக்ட்ரானிக் உலகிலிருந்து நானோ உலகிற்குச் செல்ல வேண்டுமானால் இதற்கு முதல் வழி, இப்பொழுது நாம் தயாரிக்கும் சிலிக்கன் சில்லுகளின் அளவைச் சிறிதாக்குவது. இன்றைய நுட்ப உலகில் சிலிக்கனில்தான் அதி அற்புத நுண் சாதனங்கள் வடிக்கப்படுகின்றன.
|
| |
தலையங்கம்: எது பெரிய ஆபத்து?
பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது எனச் சொல்பவர்கள் இடைத் தேர்தலில் செய்ததைப்போல் பண பலத்தையும் அதிகார பலத்தையும் அது பயன்படுத்த முடியாது என்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த முடிவுகள் அதைக்கூட அவர்கள் செய்யக்கூடியவர்கள்தான் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.
|
| |
கவிதைகள்
|
| |
பதிவுகள்: முற்றம் இலக்கிய அமைப்பு
திருச்சியில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டம் நடத்திவரும் 'வாசகர் முற்றம்' இலக்கிய அமைப்பு மே முதல் தேதியன்று நூல் விமர்சனக் கூட்டத்தை நடத்தியது. 'பாரதி "விஜயா" கட்டுரைகள்' நூல் விமர்சனத்திற்கு இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக நூலின் தொகுப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியும் பதிப்பாளர் கண்ணனும் கலந்துகொண்டனர்.
|
| |
பதிவுகள்: மீளும் தலித் வரலாறு
தமிழகம் எங்கும் தலித் சிந்தனையாளர்கள், தலித் அமைப்புகள், தலித் ஆதரவாளர்கள் பலர் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாக அறிவித்துக் கொண்டாடினனார்கள். இதற்கான ஊக்கம் பிப்ரவரி மாதத்தைக் கறுப்பர்கள் கறுப்பின வரலாற்று மாதமாகக் கொண்டாடிவருவதில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.
|
| |
அற்றைத் திங்கள்: அசோகமித்திரன்
செகந்தராபாதில் குடியிருந்தபோது தன் குடும்பம் மாடு வளர்த்த நினைவிலிருந்து பேச்சைத் தொடங்கிய அசோகமித்திரன், தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு நெருக்கடிக்குள்ளான குடும்பத்தைக் கரையேற்றும் பொருட்டுச் சென்னைக்குக் குடி பெயர்ந்ததை நினைவுகூர்ந்தார். பின் ஜெமினியில் வேலைக்குச் சேர்ந்த அவர், அப்பணி ஆட்களை ஏவல் புரியும் பணி என்று பிறகு தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
|
| |
பழக்கங்கள், மரபுகள் என்பவற்றின் குறுக்கீடு இல்லாத சட்டத்தின் பாதுகாப்பு
பதினேழாம் முறையாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில் தேர்தலை நடத்த முடியாமல் இந்திய சனநாயகமே கேள்விக்குரிதாக மாற்றப்பட்டுவருகிறது. தலித் மக்கள்மீதான இந்த வன்முறையை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை, அரசியல் கட்சிகள் என யாவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
|
|
>>More Headlines
|