| Kalachuvadu |
| |
கம்யூனிசமும் மலையாளிகளும்
அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.
|
| |
விவாதம்: வகாபியிசமும் சூஃபியிசமும்
சூபிகள் என்று பின்னர் அறியப்பட்ட முஸ்லிம் ஞானவான்கள் இந்தியாவில் இஸ்லாமைப் போதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வகாபிகள் என்று அறியப்பட்டவர்கள் ஏகத்துவத்தை அதிகமாக வலியுறுத்துவதாகக் கூறிக்கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானார்கள்.
|
| |
உரைப் பதிவு: கவிதை என்னும் விந்தை
அனுபவம் எப்படிப் படைப்பாக மாறுகிறது? ஏன் அது சில நேரங்களில் ஆற்றல் பெறுகிறது? பல நேரங்களில் ஏன் ஆற்றல் பெறாமல்போகிறது? சில கவிதைகளைப் படிக்கத் தொடங்கியதுமே அது விருப்பமின்மையையும் அலுப்பையும் ஏற்படுத்துகிறது. வேறு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் அவை அலுப்பை ஏற்படுத்துவதில்லை.
|
| |
தலையங்கம்: ஜனநாயகத்தைத் துறக்காதீர்கள்
அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஊக்குவிப்பது, அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்வது என்பவை உடனடியாகச் சில லாபங்களைப் பெற்றுத் தரலாம். ஆனால் அது உருவாக்கும் அரசியல் பண்பாடு ஜனநாயகத்தின் அடிப்படையை அரித்துவிடும். மதவாதத்திற்கான மாற்று, ஜனநாயகமே தவிர அதிகாரத்துவம் அல்ல. இதை இடதுசாரிகளும் காங்கிரசின் ஏனைய கூட்டாளிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
|
| |
அகாடமிகளின் விருதுகள்
பிராமண எதிர்ப்பு, நவீனத்துவ எதிர்ப்பு என்னும் இரண்டும் கைவரப்பெற்ற ஒரு குழு இப்பொழுது அதிகாரத்திலிருக்கிறது. எனவே அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் குஷி அடைவது நடந்துகொண்டுதான் இருக்கும்.
|
| |
தூரிகை மொழி: வண்ணங்களில் ஒளியும் நிலப்பரப்புகள்
அரூப ஓவியங்களில் பொதுவாக நமக்குக் கிடைக்கக் கூடிய அனுபவத்தை ரமேஷின் ஓவியங்கள் தருவதில்லை. அது வேறு விதமான அனுபவம். நமக்குப் பரிச்சயமான ஒரு காட்சியை, அல்லது பல காட்சிகளை, மனத்தில் தோன்ற வைத்து, இந்த ஓவியங்கள் காட்டுவது அவற்றைத்தானோ என்று நம்மை நினைக்கச் செய்யும் தந்திரத்தை ரமேஷ் கையாள்கிறார்.
|
| |
பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
சில வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழலின் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.
|
| |
அறிவுஜீவிகளின் ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது?
பெரியார் மீதான மறுவாசிப்பைத் தொடர்ந்து 'மறுப்புகள்' என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளும் கடிதங்களும் இந்து ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்துவதாகவே இருக்கின்றன.
|
| |
வெற்றுத் தலைகளின் பெருக்கம்
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் வகுத்த நெறிமுறைகளின்படியும் குர்ஆன் வலியுறுத்தும் சமூக ஒழுங்குகளின்படியும் 'ஒரு முஸ்லிம் நடிகை' என்கிற சமூக அந்தஸ்து ஒன்று இருக்கவே இருக்காது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான செயல்களைப் புரிந்தபடியே, தான் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பை ஒருவர் கோரிப் பெறவும் வழியில்லை.
|
| |
அதிநுண் நுட்பத்தின் சின்னஞ்சிறு உலகம்
நுண் தொழில்நுட்பத்தில் பொருள்கள் அடிப்படை அலகுகளான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்றன. இந்தச் சின்னஞ்சிறு உலகம் வித்தியாசமானது, தீராத அலைச்சலைக் கொண்டது.
|
|
>>More Headlines
|