|
| |
"தொட்டுப் போகும்"
'தமிழ் சிஃபி' ஆசிரியர் அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.
|
| |
மூப்பு
இந்தக் கவிதையை ஒரு காட்சிக் கவிதையாக உருவாக்கி இத்துடன் இணைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்த ஓவியனான 'வின்ஸன்ட் வான் கோ' வின் 'வயோதிகன்' என்னும் ஓவியத்தையும் இட்டிருக்கிறேன். அன்புடன் குழுமத்தின் காட்சிக் கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்ற படைப்பு, இது.
|
| |
'கோபா' பிரமிடுகள்
மாயர் மொழியில் 'கோபா' என்றால் 'காற்றில் அசையும் நீர்ப்பரப்பு' என்று பொருள். தரைமீது தண்ணீர் தங்காத 'யூகடான்' தீபகற்பத்தில், இந்தப் பிரதேசத்தில்தான் சில ஏரிகள் இருக்கின்றன! அதனால் ஆதி காலத்திலேயே இங்கே மாயர்கள் வந்து குடியேறினர். மாயர்கள் வாழ்ந்த மெக்ஸிகோ பகுதிகளில் மிகவும் உயரமான பிரமிட் மட்டுமல்லாமல், மிகவும் பழமை வாய்ந்த பிரமிடும் 'கோபா'வில்தான் இருக்கிறது.
|
| |
மாயர் சிறுவர்களின் 'டாய்ஸ்'
ஜார்ஜின் கை மூன்று முறை பெட்டிக்குள் போய் வந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய கருந்தேள் அவர் கையில் நெளிந்தது! அவைகளைத் தன் மார்பு மீதும் தோள் மீதும் ஓடவிட்ட ஜார்ஜ், கீழே விழும் தேள்களை மீண்டும் எடுத்துத் தன்மீது விட்டுக்கொண்டார்.
பேருந்தில் இருந்தவர்கள் ''ஆ!..ஊ!.." வென்று ஆச்சரியத்துடன் சத்தமிட்டனர். ஜார்ஜ் தேள்களை எல்லோருக்கும் அருகில் கொண்டுவந்து காட்டியபோது தொடுவதற்கு பயந்து பின்வாங்கினர்.
|
| |
பாதாளக் கிணறுகள்
மெக்ஸிகோவைச் சேர்ந்த 'யூகடான்', 'க்வின்டன் ரூ' பகுதிகள் சமமான சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்த பூமி. அங்கே மலைகள் கிடையாது. ஆறுகளும், ஏரிகளும் கிடையாது. 'கோபா' (Coba) என்னும் பகுதியில் சில ஏரிகளும் தெற்கு பகுதியில் பேருக்காக இரண்டு குட்டி ஆறுகளும்தான் இருக்கின்றன.
|
| |
புதுவருடம் புலம்புகின்றது!
நான் என்ன,
உங்கள் சரித்திரத்தை எழுதிவைக்கும்
ஒரு நாட்குறிப்புதானே!
என்மீது என்ன பொறிக்கப்படும்
என்பது என் கையிலே இல்லையே!
என் பக்கங்களை நிரப்பும் கடமை
உங்களுடைய கரங்களில்தானே இருக்கின்றது!
|
| |
யார் இந்த மாயர்கள்?
மாயர்களின் முகம் பரந்து இருக்கும். மூக்கு நீளமாகவும் நெற்றிக்கும் மூக்குக்கும் இடையில் பள்ளமே இல்லாமலும் இருக்கும். அவர்கள் அதிக அழகாக நினைப்பது ஒன்றரைக் கண்ணைத்தான். அதற்காகக் குழந்தையாயிருக்கும் போதே, இரு கண்களுக்கிடையில் ஒரு பொருளைத் தொங்கவிடுவார்கள். அதைப் பார்க்க முயலும் குழந்தைக்கு மாறுகண் வந்துவிடும்!
|
| |
ஓலா, மெக்ஸிகோ! (முதல் பகுதி: ரிவியேரா மாயா)
(ஆர். எஸ். மணியின் இந்தப் பதிவு, மிகவும் அரிதானது. உலகம் முழுதும் தமிழர்கள் பரவி இருந்தாலும் தாங்கள் இருக்கும் இடத்தையும் சென்ற இடங்களையும் பதிய வேண்டும்; ஆவணமாக்க வேண்டும் என்று முயல்பவர், மிகக் குறைவே. அந்த வகையில் அண்மையில் மெக்சிகோ சென்று வந்த ஆர்.எஸ்.மணி, அங்கு தான் கண்டவற்றைப் புகைப்படங்களாகவும் ஒளிப்படங்களாகவும் எடுத்து வந்துள்ளார். இத்தகைய வரலாற்றுப் பிரக்ஞையும் நயமான அணுகுமுறையும் பெரிதும் பாராட்டத்தக்கவை. எழுத்து, புகைப்படம், வீடியோ ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பல்லூடகப் பதிவினை வெளியிடுவதில் மகிழ்கிறோம். - அண்ணாகண்ணன், ஆசிரியர்)
|
| |
கேட்ட வரமே தந்துவிட்டாய்!
"தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும்" ஏசுநாதரின் பொன்மொழிகள்!
|
| |
தனிமைக்கு விருந்தாக வா
தேன் சிந்தும் பூமுடித்து
தேவதைபோல் வந்தவளே
வான்கொட்டும் மழைபோலே
|
|
>>More Headlines
|