Sify Tamil Friday, Aug 22, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> Sep 06
Amudhasurabi September 2006 Issue
•   யாதும் ஊரே...கும்பகோணம்
எந்தத் திசையில் நோக்கினாலும் பச்சைப் பசேலென்ற வயல்கள், கரும்புத் தோட்டங்கள், தென்னந் தோப்புகள்; இடையிடையே சாலைகள், வாகனங்கள், மனிதர்கள்; மண்ணை நோக்கி சிநேகத்துடன் சரியும் வானம்; பார்வை செல்லும் பக்கமெல்லாம் நெடிதுயர்ந்து நிற்கும் கோவில் கோபுரங்கள் - இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், காலங்களுக்கு ஏற்றவாறு குழைந்து கொண்டும், சிணுங்கிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சீறிக் கொண்டும் காவிரி ஆறு: இதுதான் கும்பகோணம்.

•   திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்....மலைக்கவைக்கிறார் மலையப்பர்...!
*சமீபத்தில் படித்த நூல் எது? அதன் சிறப்பு?
பாரதிவாணர் சிவா, புதுவை-10
ராணிமைந்தனின் சுகமான மொழிபெயர்ப்பில் வந்துள்ள, ஹிம்மத் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆர்.எம்.லாலா எழுதிய "நான்-இவர்கள்' என்ற நூல். எம்.எஸ். சுவாமிநாதன், மொரார்ஜி, ராஜாஜி, லால்பகதூர், காமராஜ், தெரஸா, வினோபா போன்ற பலரைப் பற்றிப் பல முக்கியத் தகவல்கள் அதில் கொட்டிக் கிடக்கின்றன. (வெளியீடு: கலைஞன் பதிப்பகம்,19. கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. விலை ரூ 150.).

•   அன்பு தான் முக்கியம், அழகல்ல!
கணவர் தன் அழகுக்குப் பொருத்தமாக இல்லை என்றும் மனைவி தன் அழகுக்குப் பொருத்தமாக இல்லை என்றும் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நாளிதழ்களில் அடிபடுகின்றன. இதே காரணமாக விவாகரத்துகளும் நடைபெறுகின்றன. நம் மனம் தந்திரம் நிறைந்தது. ஒப்பிட்டுப் பார்த்து நிம்மதியைக் கெடுப்பது. அடுத்தவர்கள் பாக்கியசாலிகள், நாம் சபிக்கப்பட்ட வர்க்கம் என்று நாமாக நினைக்கிறோம். ஒரு கணமாவது நம் பாக்கியங்களை நினைத்து நிம்மதியோடு வாழக் கற்பதில்லை. ஒப்பிட்டுப் பாராமல், இருப்பதை ஏற்கப் பழகினால் சாந்தி கிடைக்கும்.

•   செய்திக் கொத்து : மாணவர் சிறப்புப் பகுதி
தற்கொலை முயற்சியைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் உறுதி மொழியுடன் சுதந்திர தினத்தை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டாடியது.

தேர்வில் தோல்வி அடைந்தாலோ மதிப்பெண் குறைந்தாலோ அமிலம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் உண்டு. இதைத் தடுக்கும் வகையில் மாணவர்களிடம் சுதந்திர தினத்தன்று உறுதி மொழி பெறப்பட்டது. மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி:.

"ஒரு நாள் வாழ்வில் இன்பம் வரும்,
மறுநாள் வாழ்வில் துன்பம் வரும்!
ஒரு முறை தேர்வில் வெற்றி வரும்,
மறு முறை தேர்வில் தோல்வி வரும்!
தோல்வி வாழ்க்கையின் முடிவல்ல,
தற்கொலை அதற்குத் தீர்வல்ல!
பூச்சி மருந்தும் அரளி விதையும்

•   கலை: நாடகம்..ரசிகர்களைத் தேடி நாம் போகவேண்டும்! - டி.டி. பாலு
கே. எத்தனை வருடமாக நாடகங்களில் நடித்து வருகிறீர்கள்? எந்தெந்தக் குழுக்களில் பணியாற்றி இருக்கிறீர்கள்?
35 வருடமாக நடிக்கிறேன். முதலில் சங்கீதாஞ்சலி என்ற குழுவில் புரந்தரதாசர், மந்த்ராலய மகான், சீனிவாச கல்யாணம், ராமானுஜர் போன்ற புராண நாடகங்களில் நடித்திருக்கிறேன். எஸ்.வி. சேகரின் நாடகப்ரியா குழுவில் 3000 நாடகங்கள் நடித்து இருக்கிறேன். ஸ்டேஜ் ப்ரியா என்ற குழுவில் 3 நாடகங் கள் 'ரீல் மச்சி ரீல்','அப்பா பேச்சு கா', 'துபாய் கொழுக் கட்டை' போன்ற நாடகங்களில் நடித்தேன். பாஸ்கியின் அரிகிரி தியேட்டர்சில் நடித்துக் கொண்டும் டைரக்ட் பண்ணிக் கொண்டுமிருக்கிறேன். பாலசந்தரின் எல்லா டி.வி. சீரியல்களிலும் கிருஷ்ணா காட்டேஜிலும் நடித்திருக்கிறேன்.

•   மறக்க முடியாத அம்மா: எழுத்தாளர், சமூக சேவகி வசுமதி ராமசுவாமி..கவரக்கூடிய பளிச்
எனக்குக் கிடைத்த தாயார், நான் போன பிறவி களில் பண்ணின தவப் பயனே. என் தாயார், வாழ்க்கை யில் நிறைய மேடு பள்ளங் களைச் சந்தித்தவர். தன் வெவ்வேறு அனுபவத்தில் அவ்வப்பொழுது அவர்கள் உதிர்த்த தத்துவங்களை எல்லாம் திரட்டினால், ஒரு தனிப் புத்தகமே போடலாம்.

அவருடைய பேச்சுத் திறனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 'தக்காருக்குத் தக்கினபடி தறிபோட்டு நெய்வது' என்பார்களே, அதுபோல மேடைப் பேச்சுகள் மட்டுமல்லாது, குடும்பங்களிலும் தன் நடுவயது களில் தன்னுடன் கூடியிருக்கிறவர்களைப் பேச்சுத் திறனால் கவர்ந்திருக்கிறார். சிலசமயம் பேச்சுகளில் ஹாஸ்யம் ததும்பி நிற்கும். சென்னை வானொலியில் ஆரம்பத்திலிருந்து 'மாதர் மலர்' நிகழ்ச்சியிலும். பல விவாதங்களிலும் பங்கெடுத்துக் கொண்டார்.

•   சின்னஞ்சிறு கதை.. "அந்தப் பெரியவர்'
"சார் ஒரு நிமிஷம்......"

வங்கியை விட்டு வெளியே அவசரமாக வந்து கொண்டிருந்த என்னை அந்த அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர் தடுத்து நிறுத்தியபோது எனக்கு திடுக்கென்றது.

"சார், ஐ ஆம் எ ரிட்டையர்டு சப்-இன்ஸ்பெக்டர். எம் பேரு ராமரத்தினம்.....

•   அட்டைப்படக் கட்டுரை: கலை: ஓவியம், சினிமா..ரவிவர்மா வாழ்க்கை படமாகிறது...சூர்ய
(ஜோதிகாவுக்கு சந்திரமுகி, மாதுரிதீட்சித்துக்கு சூரியமுகி!)கடவுள் ஓவியர் ராஜா ரவிவர்மாவுக்கும் நடிகை மாதுரி தீட்சித்துக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது.

அதற்கு முன் ராஜா ரவி வர்மா...
ஓவியத்துக்காக அரச வாழ்க்கையையே துறந்தவர். பழமைவாதிகளின் ஆதிக் கத்துக்கு அடிமைப்பட் டிருந்த கேரள நாட்டின் திருவாங்கூர் அரச வம்சத்தில் தோன்றி, ராஜ குடும்பத்துப் பெண் ணொருத்தியை மணந்து, குழந்தைகளும் பெற்ற இந்த அரசர், ஓவியத்துக்காகவும், அது தொடர்பான காதலுக் காவும் அரச வாழ்க்கை, மனைவி மக்கள் எல்லோரையும் புறந்தள்ளியவர்.

•   டஹற்ட்ண்ஸ்ன்ஞ்ஹப் ...டி.கே.சி.க்கு ஒரு விழா...
நீல பத்மநாபனுக்கு விருது....
தாய்மொழியல்லாத பிற இந்திய மொழிகளில் இலக்கியப்படைப்புத் திறனுள்ள எழுத்தாளர்களுக்கு மைசூரில் இயங்கிவரும் மைய இந்திய மொழி நிறுவனம் (இங்ய்ற்ழ்ஹப் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ஞச் ஐய்க்ண்ஹய் கஹய்ஞ்ன்ஹஞ்ங்ள்-இஐஐத) அளித்துவரும் 'பாஷா பாரதி சம்மான்' - 2003-04 (ரூ.25000) அண்மையில் மைசூரில் வைத்து நடந்த விழாவின் போது 14 இந்திய மொழி இலக்கியாசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழைத் தாய் மொழியாய்க்கொண்ட நீல.பத்மநாபன் மலையாளத்தில் படைத்த "அர்க்கண்டெ கோணில்' என்ற சிறுகதைத் தொகுதிக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது. விருதை பேராசிரியர் சச்சிதானந்தன் நீல பத்மநாபனுக்கு வழங்குகிறார். பக்கத்தில் நிற்பவர்கள் இஐஐக-ன் இயக்குனரும் மைதிலி மொழி கவிஞருமான பேரா. உதய நாரயண சிங்கும் முக்கியச் சொற்பொழிவு நிகழ்த்திய பிரபல கவிஞர் திலீப் சித்ரெயும்.
•   அறிவியல்: கணிப்பொறித் துறை..மகத்தான வளர்ச்சியில் மல்டிமீடியா
பத்மினி பட்டாபிராமன் சென்னை தொலைக்காட்சியில் (பகுதி நேர) அறிவிப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அமுதசுரபி, ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், மங்கையர்மலர், மஞ்சரி போன்ற பத்திரிகைகளில், சிறுகதை, குறுநாவல், கட்டுரை எழுதி வருபவர். வானொலி நாடக ஆசிரியர், மஞ்சரியில் நேபாள பயணக் கட்டுரைக்கும் பரிசு பெற்றவர், மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன் துறையில் பயிற்சி பெற்று, அண்ணா பல்கலை, மற்றும் தனியார் நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியையாகப் பணிபுரிபவர், மேலும் அனிமேஷன் துறையில் பயிற்சி எடுத்து வருபவர்; "உலக சுற்றுலா வாசியாக" என்றும் ஐரோப்பிய அமெரிக்கப் பயணம் பற்றிய புத்தகம், மற்றும் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, "மாமரத்துவீடு" ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us