|
 |
| Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> October 2006 |
 |
|
|
|
| |
செல்பேசி உபயோகிப்போர் கவனத்திற்கு!
செல்ஃபோன் எனப்படும் செல்பேசி இப்போது பரவலாகப் புழக்கத்தில் வந்துவிட்டது. பூக்காரிகளும் ஆட்டோ ஓட்டுநர்களும் கூட செல்பேசி வைத்திருக்கிறார்கள்.அவரவர் தொழில் சார்ந்து ஒரு செல்பேசி கைவசம் இருக்க வேண்டிய நெருக்கடி நிறைந்த காலகட்டம் இது. பெற்றோர் பணிக்குச் செல்லும்போது பிள்ளைகளிடம் தொடர்பு கொள்ள, பிள்ளைகள் பெற்றோரைத் தொடர்பு கொள்ள செல்பேசி தான் உதவுகிறது. சம்பந்தப்பட்டவரை உடனுக்குடன் அணுகி உறவையும் நட்பையும் மேம்படுத்திக் கொண்டு வாழ்வை வளமாக்குவதில் செல்பேசி செய்யும் சேவைக்கு ஈடு இணை இல்லை.
|
| |
நகரம்
மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல் 'பைப்' அருகே குடங்கள் மனிதர் களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன் கள் 'டெட்டானஸ்' கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந் தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பஸ்கள் தேசீயம் கலந்த டீஸல் புகை பரப்பிக்கொண்டிருந்தன. விரைப்பான கால்சாரய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் 'இங்கிட்டும் அங்கிட்டும்' செல்லும் வாகன - மானிடப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவித ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்தது. (பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்.)
|
| |
தமிழன் என்ற அடையாளத்தை சர்வதேச அளவில் முன்நிறுத்துவோம்!- தர்மகுலசிங்கம் தர்மன்
திரைகடலோடித் திரவியம் தேட, கடலோடி யானார். பல அனுபவங்களுடன் இலங்கை திரும்பி, திருமணஞ் செய்தார். இலங்கையில் வாழ முடியாத நிலையில் விரக்தியுற்றார். டென்மார்க் சென்று, குடி யேறினார். டேனிஷ் மொழியுடன், ஏற்கெனவே ஒரளவு அறிந்திருந்த பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி கற்றார். டேனிஷ் அரசின் துவிபாஷியாக நியமிக்க ப்பட்டார். டென்மார்க்கினைத் தளமாகக் கொண்டு தமிழ் மொழி, கலாசாரப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஐரோப்பாவில், தமிழ் நிகழ்கலைகளை வளர்த்து வருகிறார். அவற்றைத் தமிழினூடே எடுத்துச் செல்வதை அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சாத்தியப்படுத்தியுள்ளார்.
|
| |
பக்திக் கவிஞர்களும் - பரதக் கலைஞர்களும்
யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோருமே நாத்திகர்கள் தாம். நாளின் ஒரு சிறு மணித்துளியில் பகவானை நாம் எப்போதாவதுதான் நினைக்கிறோம். அந்த நொடி மட்டுமே நம் மனம் அவனிடம் ஈடுபடுகிறது. அந்தச் சூழலில் இருந்து நாம் விடுபட்டவுடன் நாம் கடவுளை நினைக்கிறோமா? அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில், தெய்வங்களை நினைத்துப் பார்க்க நேரம் எங்கே? நம்மைச் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டுமானால், நாம் ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். கடவுள் இல்லை என மறுக்காமல் அவனை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே அந்த நேரத்துக்கு நாம் ஆத்திகர்கள். மற்ற நேரமெல்லாம் நாத்திகர்தாம். பகுதி நேர ஆத்திகர்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
|
| |
பதிவுகள்: "கவிக்கோ விருது' விழா..எளிமையான இலக்கண நூல் தேவை -பொள்ளாச்சி மகா
2006ம் ஆண்டிற்கான கவிக்கோ விருது விழாவும் அப்துல் ரகுமானின் நூல்கள் வெளியீட்டு விழாவும் செப்டம்பர் 10-ல் கோவை ஹோட்டல் 'அஸ்வின் டீலக்ஸ்' அரங்கில் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சை அள்ளும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றன.
|
| |
குருவே சரணம்!
குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் தலை தூக்கலாம். எனவே தம்பதியினர் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்துப் போகவும். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் முயற்சியில் தடைகள் வரலாம். 20-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். கலைஞர்கள் சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களைக் காண வேண்டியதிருக்கும். குரு 8-ம் இடத்திற்கு அடி யெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப் பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொதுவாக மன வேதனையையும், நிலை யற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளா தார சரிவை ஏற்படுத்துவார்.
|
| |
ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை, தியானங்கள் - ஒரு பரிச்சயம்
ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள், அவர் வழங்கிய ஆசிகள், செய்திகள், விளக்கங்கள், பல வருடங்களுக்கு முன்னால் எழுதியவை, அனைத்தும் பதினேழு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. அவைகளில் முதல் தொகுதியாக விளங்குவது தான் ஸ்ரீ அன்னையின் பிராத்தனைகளும் தியானங்களும். முந்நூற்றுப் பதிமூன்று பிரார்த்தனைகள் அடங்கிய அருமையான பொக்கிஷம்.
|
| |
மதராஸில் சென்னை
சென்னை பிறந்து இது 368ம் வருடம். ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி, 27ம் தேதி வரை பல நிகழ்ச்சிகளைச் சென்னையைச் சுற்றி எற்பாடு செய்திருந்தனர் வின்செண்ட் டி'செசா, சஷி நாயர், மற்றும் எஸ் முத்தையா. பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளப் பல சென்னைவாசிகள் திரளாக ஒன்றுகூடினார்கள்.நடனத்தில் ஆரம்பித்தது, சென்னையின் பிறந்த தினக் கொண்டாட்டம்.தமிழ்நாட்டின் பழங்கால நடன வகைகளைப் பற்றி, 'தி பார்க்' ஓட்டலில், இனிமையான மாலை வேளை ஒன்றில் திருமதி லஷ்மி வெங்கடேசன் ஆகஸ்ட் 20ம் தேதி பேசினார். நடனக் கலைஞரான லஷ்மி, பரதத்தைப் பற்றி நுணுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரித்தார்.
|
| |
குருவே சரணம்!
மேஷம்: குருவின் பார்வையால் கோடி நன்மை! குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் தலை தூக்கலாம். எனவே தம்பதியினர்ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்துப் போகவும். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில்இருப்பதால் முயற்சியில் தடைகள் வரலாம். 20-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில்சற்று ஒதுங்கி இருக்கவும். கலைஞர்கள் சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களைக் காணவேண்டியதிருக்கும். குரு 8-ம் இடத்திற்கு அடி யெடுத்து வைத்திருக்கிறார். இதுஅவ்வளவு சிறப் பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொதுவாகமன வேதனையையும், நிலை யற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளா தார சரிவைஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்குத் தனி சக்தி உண்டு. அந்தப் பார்வைஉங்களுக்கு சாதக மாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகள்அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்தஇடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்குவழிவகுக்கும்.
|
| |
ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை, தியானங்கள் - ஒரு பரிச்சயம்
ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள், அவர் வழங்கிய ஆசிகள், செய்திகள், விளக்கங்கள்,பல வருடங்களுக்கு முன்னால் எழுதியவை, அனைத்தும் பதினேழு தொகுதிகளாகவெளியாகியுள்ளன. அவைகளில் முதல் தொகுதியாக விளங்குவது தான் ஸ்ரீஅன்னையின் பிராத்தனைகளும் தியானங்களும். முந்நூற்றுப் பதிமூன்றுபிரார்த்தனைகள் அடங்கிய அருமையான பொக்கிஷம். ஸ்ரீ அன்னை, ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும்பொழுது, இறை நிலையையோவியாபித்த நிலையையோ அடைந்து, பரம தெய்வீக அன்னையின் முன்போ, சாக்ஷாத்பரமனின் முன்போ தன் உணர்வு நிலைகளை சில சமயம் எண்ணங்களையும் - ஒளிவுமறைவின்றி சமர்ப்பிப்பார். தெய்வ அன்னையோ, பரமனோ அவருக்கு பதில் கூறாமல்இருந்தது கிடையாது. அவர்கள் மொழிந்தது ஸ்ரீ அன்னைக்குப் புலப்படும். 'செய்யவேண்டியது என்ன, எது பரிசுத்தம் அடைய வேண்டுமென்ற தெளிவு', அவருக்குள்நிலை கொள்ளும்.
|
|
>>More Headlines
|
|
|
|
|
|
|
 |
|