உங்கள் அழகின் ரகசியம் என்ன?

ரசிகர்கள், கதாநாயகிகளைத் தங்கள் முன்மாதிரிகளாகக் காண்கிறார்கள். எனவே நடிகைகள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். பருவ காலங்கள், தண்ணீர், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறக் கூடியது உடல் சருமம். எனவே அதற்கு நான் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறேன். நான் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதில்லை; ஆனால், குறைவாகவே சாப்பிடுகிறேன். இனிப்பு கள், ஐஸ் கிரீம், எண்ணெய்ப் பண்டங்கள் ஆகியவற்றை நான் தவிர்க்கிறேன்.

எதில் நீங்கள் அதிகம் செலவழிப்பீர்கள்?

பணத்தை வீணடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. தங்க நகைகளை வாங்கிக் குவிப்பதையும் அணிவதையும் வெறுக்கிறேன். ஆனால், என் அண்மைக் கால விருப்பம், பிளாட்டின நகைகள். பாருங்கள் (தன் அழகிய விரல்களைக் காட்டுகிறார்). இவை என் பிளாட்டின மோதிரங்களைச் சேர்த்துக்கெ ஡ண்டிருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு?

எனக்கு வட இந்திய உணவுகள் பிடிக்கும். என் அப்பா விமானப் படையில் பணி புரிந்ததால் என் பள்ளிப் பருவம், வட இந்தியாவில் கழிந்தது. ஒரு வேளை அதனாலும் எனக்கு அவை பிடித்தமாய் இருக்கலாம். எனக்கு எதுவும் சமைக்கத் தெரியாது. ஆனால், சமையல் அறையில் ஏதாவது பரிசோ தனைகள் செய்யப் பிடிக்கும். பெரும்பாலும் என் அம்மா, என்னை வெளியில் ஏதேனும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று விடுவார்.

உங்கள் பொழுதுபோக்கு?

அது, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இப்போதைக்கு, இனிய மென்மையான பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். பயணம் செய்வதும் புது இடங்களைப் பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும். காரை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் செல்வதும் ரொம்ப பிடிக்கும்.

கோபம்?

நான் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிற ஆள். எனக்கு ஏற்ற மாதிரி ஏதும் நடக்காவிட்டால் அமைதி இழந்துவிடுவேன். உடனே அது என் முகத்தில் தெ ரிந்துவிடும். அதுதான் கோபமா?

கிசுகிசுக்கள்?

கிசுகிசு என்றாலே பொய்ச் செய்தி என்றுதான் பொருள். கிசுகிசு இல்லாத ஒரு நடிகையையாவது எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். நாம் எல்஧ லாருமே அடுத்தவர்களைப் பற்றிக் கிசுகிசுக்களை ஆவலோடு படிக்கிறோம்; கேட்கிறோம். நான்கூட கல்லூரியில் படிக்கும்போது நடிகைகளைப் பற்றிக் கிசுகிசுக்களை ஆவலோடு கேட்டிருக்கிறேன் (சிரிக்கிறார்). எனவே, இது இந்தத் தொழிலின் ஒரு பகுதிதான். நான் திரைப்படங்களில் ந டிப்பது குறித்து யோசித்ததுகூட இல்லை. ஆனால், கடவுள் எனக்காக ஓர் இடத்தை வைத்திருக்கிறார். கடவுள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்வேன்.

உங்கள் மிகப் பெரிய ஆதரவாளர்?

கடவுள்தான்.

குடும்பம்?

என் குடும்பத்தினர் என்னுடன் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள். அவர்களிடம் நான் எதையும் பகிர்ந்துகொள்ள முடியும். என் அண்ணனும் அவர் குடும்பத்தினரும் துபாயில் வசிக்கிறார்கள். அவர் என்னை விட 9 வயது மூத்தவர். என் பெற்றோர்களுக்கு நான் செல்லப் பெண். ஆனால், அதற்காக அதிகச் செல்லமும் கொடுக்க மாட்டார்கள்.