நயன்தாரா, பெயருக்கு ஏற்ப அழகிய விழிகள் கொண்ட ஓர் எழிலோவியம். சுட்டும் சுடர் விழி; அதில் மின்னல் கீற்றுகள்; படபடக்கும் பட்டா ம்பூச்சியைப் போல் இமைகள்; இளமையின் விளைச்சலாய் ஒரு கட்டுடல்; அதில் மலையாள மண்ணுக்குரிய செழுமை; பொன்னிற மேனி; அமைதி தவழும் பேரழகு; உணர்ந்து நடிக்கும் உயர்ந்த ஆற்றல்.... தென்னிந்தியா முழுவதையும் கட்டிப் போட, வேறென்ன வேண்டும்?

அழகு, திறமை மட்டுமில்லாமல் தன் துறையில் முதல் இடத்தைப் பிடிக்கிற உத்வேகமும் இவரிடம் உள்ளது. இன்றைய நிலையில் தென்னிந்தியாவின் முதல் மூன்று கதாநாயகிகளில் நயன்தாரா ஒருவர்.

கேரளாவின் மத்திய திருவிதாங்கூரில் உள்ள திருவல்லா என்ற சிறிய நகரத்திலிருந்து இப்படி ஒரு அழகுப் புயல் தோன்றும் என்று யாருமே எதிர்ப ஡ர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நயன்தாரா தோன்றினார். டயானா குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவரை, புகழ்மிக்க இயக்குநர் சத்தியன் அத்திக்காடு, தன் 'மனசினக்கரே' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் நயன்தாரா, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தார். முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிய ஡ற்றினார். தமிழில் 'ஐயா' என்ற படத்தில் அறிமுகமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகியில் நடித்த பிறகு புகழின் உச்சிக்குச் சென்றார்.

சூப்பர் ஸ்டார்களுடன் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு, தன் அதிருஷ்டம் என்று நயன் நம்புகிறார். 'சந்திரமுகி', 'கஜினி', 'கள்வனின் காதலி' ஆகிய வெற்றிப் படங்களில், அவர் சிறப்பாக நடித்தார். 2006இல் அவர் நடித்து 4 தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன.

தெலுங்கில் வெங்கடேஷூடன் இணைந்து நயன் நடித்த 'லட்சுமி' என்ற படம், 2006இன் சூப்பர் ஹிட் படமானது. அதே போன்று நாகார்ஜூனாவு டன் இணைந்து நடித்த 'பாஸ்', பிரபாஸூடன் இணைந்து நடித்த 'யோகி' ஆகியவையும் வெற்றி பெற்றன.

தொடர்ச்சியான வெற்றிகள் பெற்ற நயன்தாரா, படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கவர்ச்சி க்காக உடலை முன்னிறுத்துவதை விட, நடிப்பை வெளிப்படுத்துவதையே நயன் விரும்புகிறார். அவரை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் விரும்பி, தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். கையில் நிறைய பட வாய்ப்புகளுடன் திரையுலகில் ஒரு 'சக்தி'யாக அவர் உ ருவெடுத்துள்ளார்.